பள்ளிகளுக்கு மிரட்டல் ஐ.எஸ்.ஐ.எஸ் பங்கு

இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள பள்ளிகளுக்கு வந்த பல்வேறு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன. இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்த்தில் அவை புரளி என தெரியவந்தது. இவ்வழக்கை சைபர் கிரைம் பிரிவு விசாரித்து வருகிறது. இந்த மின்னஞ்சல்களை அனுப்ப பத்து ஜிமெயில் ஐடிகள் பயன்படுத்தப்பட்டன.  அவற்றின் பிரதான சர்வர் பாகிஸ்தானில் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மின்னஞ்சல் அனுப்பியவர்களின் அடையாளம் கண்டறிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பங்கு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது என காவல்துறை தெரிவித்து உள்ளது.