என்.டி.டி.வியின் போலித்தனம்

போலி செய்திகளை வெளியிடுவதிலும், உண்மையை திரித்துக் கூறுவதிலும் புகழ்பெற்றது என்.டி.டிவி. அதன் ஆசிரியர் ஸ்ரீனிவாச ஜெயின், கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் போலி செய்திகளை வெளியிட்டு மாட்டிக்கொண்டவர். அவ்வகையில், சமீபத்தில் அவரது டுவிட்டர் பக்கத்தில், பாரத் பயோடெக்கில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் பற்றிய ஒரு போலி செய்தியை பதிவிட்டார். அந்த பதிவில், ‘கோவாக்சினின் ஆரம்ப தொகுதிகள் சரியான தரத்தில் இல்லை என்று மத்திய அரசின் தடுப்பூசி ஆலோசனை குழுத்தலைவர் டாக்டர் என்.கே அரோரா என்னிடம் தெரிவித்தார்’ என பதிவிட்டார். ஸ்ரீனிவாச ஜெயினின் இந்த போலி பதிவிற்கு சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு தனது பொய்யை நியாயப்படுத்த ஒரு விளக்கத்தை வெளியிட்டார். அதில், ‘டாக்டர் அரோராவின் கூற்றுப்படி, பெங்களூரு ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுதி தரம் சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக அனுப்பப்படவில்லை. புதிய தரமான மருந்துகள் மட்டுமே மக்களுக்கு செலுத்த அனுப்பப்பட்டன என அதற்கு சாக்குபோக்கு சொல்லி மழுப்பியுள்ளார்.