சென்னை அண்ணாநகர் நகரை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரி காட்ப்ரேநோபுள். காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “சென்னை அண்ணாநகரை சேர்ந்த கிறிஸ்தவ பெண் மதபோதகர் மரியம்செல்வம் என்பவர் தன்னிடம் கிரீஸ் நாட்டில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் தனது மகனுக்கு கிரீஸ் நாட்டில் மூன்று லட்சம் சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அதற்கு பல தவணைகளாக 8.5 லட்சம் வரை பெற்றார். பணி ஆணை வழங்கி பல மாதங்களாகியும் வேலைக்கு அழைக்காததால் சந்தேகமடைந்து பணி நியமன ஆணையை ஆய்வு செய்தபோது அது போலி என தெரியவந்தது. இது குறித்து விசாரித்தபோது, மரியம்செல்வம் இதுபோல நாடு முழுவதும் மோசடி செய்தது தெரியவந்தது. காவல் புகார் அளிக்க போவதாக கூறியதால் மரியம்செல்வம் இரு போலி காசோலைகளை அளித்து ஏமாற்றினார், கொலை மிரட்டல் விடுத்தார்’ என தெரிவித்துள்ளார். பெரியமேடு காவல் நிலையத்தில் மரியம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர், பெண் மத போதகர் மரியம்செல்வம் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனர்.