ஹனுமான் சாலிசா எரிப்பு

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் கடந்த மே 16 அன்று ஹனுமான் சாலிசா புத்தகங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகரின் கிலா சாஹிப் பகுதியில் எரிக்கப்பட்ட புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஹனுமான் சாலிசாவை தீ வைத்து எரித்துவிட்டு எச்சங்களை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் எரிந்த பக்கங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய மாநில பா.ஜ.க தலைவர் சுக்பால் சரண், “இது போன்ர சம்பவங்கள் சிறிது காலமாக ஆங்காங்கு நடந்து வருகின்றன. பெரும்பாலானவற்றில் ஹிந்து மற்றும் சீக்கிய மதங்களை விட்டு வெளியேறியவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மேலும், ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் தூண்டிவிடுவதற்காக இதுபோன்ற சம்பவங்களுக்கு அவர்கள் தசரா, தீபாவளி, குருபுரப் போன்ற நாட்களை தேர்வு செய்கின்றனர். இதேபோன்ற பல பழைய வழக்குகளில் அகாலி தள அரசோ அல்லது காங்கிரஸ் அரசோ உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் அரசியலில் தீவிரம் காட்டிய பிறகு, இதுபோன்ற சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. இதனால், மக்கள் கோபத்தில் உள்ளனர்” என தெரிவித்தார்.