ஒரு நடிகரின் அனுபவம்

தி காஷ்மீர் ஃபைல்ஸ்  திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நமது மனத்தை கனக்க வைத்தது. ஒரு கலைவிழாவில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படக் குழுவினர் கலந்துகொண்டனர். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மூத்த நடிகர் அனுபம் கெர், திரைப்படத்தில் நடித்த தனது உணர்வுகளையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், “இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நடித்த பிறகு நான் அழுதேன். ஒரு நடிகனாக அல்ல, ஒரு காஷ்மீரி பண்டிட்டாகவே அழுதேன்’ என கூறினார். அந்த வலியை அவரது குரலில் நம்மால் நன்றாகவே உணர முடிந்தது.

இந்தப் படத்தில் அனுபம் கெர் புஷ்கர் நாத் பண்டிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனுபம் கெர் உண்மையாகவே ஒரு காஷ்மீரி பண்டிட் என்பதும் அவரது தந்தையின் பெயரும் புஷ்கர் நாத் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால்தானோ என்னவோ அவர் உண்மையான காஷ்மீரி பண்டிட்டை படத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார்.

மேலும், அவர், “நான் காஷ்மீர் ஃபைல்ஸ் ஸ்கிரிப்டைப் படித்தபோது, ​​​​அது யதார்த்தத்திற்கு மிக அருகில் இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் அதற்காக, நான் பெருமையடையவில்லை, இந்த யதார்த்தத்தைப் பற்றி பேசுவதற்கு நமக்கு 32 வருடங்கள் ஆனதற்கு நான் வருத்தப்படுகிறேன். ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் ஒன்றுகூடி, ஆசிஃபா  கொலையைப் பற்றி பேசினார்கள். ஆனால் மிகப் பெரிய இனப் படுகொலையான “காஷ்மீரி பண்டிட்டுகள் படுகொலை”யின் யதார்த்தத்தைப் பற்றி பேசவில்லை. இது ஒரு படம் மட்டுமல்ல, இறுதியாக சொல்லப்பட்ட உண்மை. இந்த இனப் படுகொலையில் அனைத்தையும் இழந்து காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்ட அனைத்து ஹிந்துக்களின் உணர்வு.

மற்ற சம்பவங்களைபோல இந்த உண்மைகள் தலைப்புச் செய்தியாக வர அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் இது சிலர் செய்த சதி. சிறிய பிரச்சினைகளைகூட ஆழமாக விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்கூட, இந்த இனப்படுகொலை விசாரணையை ஆதரிக்காதது வருத்தமளிக்கிறது. இதற்கு அரசாங்கம், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பொறுப்பு. நாம் அனைவரும் அதே குற்ற உணர்ச்சியையும் வெட்கத்தையும் உணர வேண்டும்.  இந்தப் பிரச்சினையைப் பற்றி யாரேனும் தங்கள் கருத்தை வெளியிட்டால், அவர் ஒரு ஹிந்துத்வாவாதி என்று முத்திரை குத்தப்படுவார்கள். உங்கள் கருத்துகளை உரத்த குரலில் தெளிவாகக் கூற அனுமதிக்கப்படமாட்டீர்கள்.

 அனுபம் கெர் சொன்னது போல, உண்மை இறுதியாகச் சொல்லப்பட்டுள்ளது. மார்ச் 11, 2022 அன்று நாம் அதற்கு சாட்சியாக இருப்போம். காத்திருப்போம்.