கோயில் இடத்தை ஆக்கிரமித்த தி.மு.கவினர்

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி அன்னதானம் செய்வதற்காக சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே சிதம்பரம்பிள்ளை என்பவரால் உருவாக்கப்பட்ட பாளையங்கோட்டை ஒன்றியம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள கே.எம்.எஸ் அன்னதான சத்திரத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தை தி.மு.க மற்றும் நாம்தமிழர் கட்சியை சார்ந்த தனி நபர்கள் ஆக்கிரமித்து வருவாய்த்துறை ஆவணங்களை முறைகேடாக மாற்றியுள்ளனர். ஹிந்து சமய அறநிலையத்தையும் மாவட்ட வருவாய்துறையும் அந்த இடத்தினை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இதற்காக போராடி வரும் பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற கோரியும் கிருஷ்ணாபுரம் கிராம பொதுமக்கள் சார்பில் இந்து முன்னணி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. இந்துமுன்னணி மாநில செயலாளர் கா. குற்றாலநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்துமுன்னணி மாவட்ட தலைவர் சிவா, மத்திய அரசு வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் பிரம்மநாயகம் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.