சரத்பவாரின் ஆக்கபூர்வ கருத்து

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஹரியானா எல்லையில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் எனும் போர்வையில், விவசாய ஏஜெண்டுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் மத்திய விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார், ‘மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டாம். அவற்றில் சில மாற்றங்கள் செய்தால் போதும்’ என கூறியுள்ளார். சரத்பவாரின் இந்த ஆக்கபூர்வ கருத்தை வரவேற்று கருத்து தெரிவித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர்நரேந்திர சிங் தோமர், விவசாய சட்டங்கள் பற்றி சரத்பவார் தெரிவித்துள்ள கருத்துக்களை வரவேற்கிறேன். சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாக விவசாய அமைப்புகளுடன் ஏற்கனவே 11 முறை மத்திய அரசு பேசி உள்ளது. சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள் பிடிவாதம் பிடிப்பதால் தான், பிரச்னை தொடர்ந்து நீடிக்கிறது. விவசாய அமைப்புகளுடன் பேச, மத்திய அரசு தயாராகவே உள்ளது. விவசாயிகளின் ஆலேசனைகளை பெற்று, சட்டங்களில் மாற்றம் செய்யவும் தயாராக உள்ளது’ என கூறினார்.