மது விற்பனை ஏன் நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில்,’தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ளது. மது அருந்துவோருக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. குடிமகன்களால் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற முடியாது. இவர்களால் தொற்று பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. எனவே தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே மூட உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மனிதர்களின் உடலில் எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுபானங்களின் விற்பனையை இன்னும் அனுமதிப்பது ஏன்?’ என கேள்வி எழுப்பினர். மனுவிற்கு மாநில அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4க்கு ஒத்தி வைத்தனர். முன்னதாக, கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது டாஸ்மாக்கை மூட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி கொடி பிடித்ததும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுபான தொழிற்சாலைகளை மூடுவோம் என கனிமொழி சொன்னதும் நினைவுகூரத்தக்கது.