முஸ்லிம்களின் சன்னி பிரிவின் தலைவர்களில் ஒருவரான கேரளாவை சேர்ந்த ஹமீது பைசி அம்பலக்கடவு என்பவர், வெளியிட்டுள்ள ஒரு வீடியோ செய்தியில், ‘சபரிமலை கோயிலுக்குச் சென்ற கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், இஸ்லாமை விட்டு வெளியே செல்ல கதவைத் திறந்துவிட்டார். ஹிஜாப் குறித்த ஆளுநரின் கருத்துகளை ஒரு முஸ்லீம் கருத்து என்று கருதக்கூடாது. பா.ஜ.கவில் தனக்கு புதிய பதவிகள் கிடைக்கும் என்று நம்பி இஸ்லாத்தை கேலி செய்கிறார். ஒரு முஸ்லீம் மற்ற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று, அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றி, அவர்களின் ஆடைகளை அணிந்தால், அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை யாராவது கேள்வி கேட்டால் அவர் மதத்தை விட்டு வெளியேறியவர் என்பது இஸ்லாத்தில் நிபந்தனை. ஆரிப் முகமது கான் காஃபிர் (முஸ்லிமல்லாதவர்) ஆகிவிட்டார்’ என்றார்.