பா.ஜ.க பதிவு நீக்கம்

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் 2008ம் ஆண்டு அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 38 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையும், 11 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த பயங்கரவாதிகளின் தண்டனை குறித்து குஜராத் பா.ஜ.க பிரிவு டுவிட்டரில் ஒரு கார்ட்டூன் பதிவை போட்டது. இப்பதிவை, டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. டுவிட்டரின் விதிகளை மீறியதாக  இதற்கு காரணம் தெரிவித்துள்ளது டுவிட்டர்.  ஆனால், இந்த டுவிட்டர் பதிவில், வன்முறையோ, தேச விரோத பதிவுகளோ ஏதுமில்லை என்பது பார்ப்பவர்களுக்கே புரியும். விவசாயிகள் போராட்டம் குறித்த போலியான செய்திகளைப் பரப்பும் டுவீட்களை மத்திய அரசு உத்தரவிட்டும் நீக்க முரண்டு பிடித்த டுவிட்டர் நிறுவனம், இதுபோன்ற பதிவுகளை மட்டும் உடனடியாக நீக்குவது, அதன் இடதுசாரி மனநிலையையே பிரதிபளிக்கிறது என சமுக ஊடகங்களில் குர்றம் சாட்டப்படுகிறது.