பொன்முடிதான் பொறுப்பு

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு தி.மு.க அமைச்சர் க.பொன்முடி வருவதையொட்டி சாலையோரத்தில் தி.மு.க கொடிக்கம்பங்கள் நடப்பட்டன. இதில் உதவிக்காக வந்த 13 வயது தினேஷ் என்ற சிறுவன் கட்சிக் கம்பம் ஊன்றியபோது உயர்மின் கம்பி உரசி சிறுவன் தூக்கி வீசப்பட்டான். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானான். சிறுவனின் தாய் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். சிறுவனின் மரணத்தை சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவனை அழைத்து சென்ற வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிறுவன் உயிரிழப்பிற்கு அமைச்சர் பொன்முடி பொறுப்பேற்க வேண்டுமென்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். கடந்த 2019 செப்டம்பரில் அ.தி.மு.க பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் பலியானபோது பொங்கிய தி.மு.கவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஏனோ என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.