கிராமப்புற இளைஞர் திறன் வளர்ச்சி

நமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தீனதயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் வளர்ச்சி திட்ட முகாம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதில் பதிவு செய்தவர்களில் தகுதியுள்ள 75,660 இளைஞர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கோடு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் 16 முதல் 35 வயதிற்குள் உள்ளோருக்கு 2,381 பயிற்சி மையங்களில் 611 வகையான வேலைவாய்ப்புத் திறன் வளர்ச்சிப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுவரை 11 லட்சத்தி 18 ஆயிரத்து 567 இளைஞர்கள் இதில் பலனடைந்துள்ளனர். அதில் 7.07 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.