அபாயகட்டத்தில் பாடநூல் நிறுவனம்

தமிழக பாடநூல் நிறுவனத்தில் பெண்களை கொச்சையாக விமர்சிக்கும் ஐ. லியோனியை நியமிக்கத்தபோதே, வருங்காலத்தில் பாடதிட்டங்களில் தி.மு.க தலைமையிலான தமிழக அரசு மேற்கொள்ளவிருக்கும் அபாயகரமான மாற்றங்கள், இருட்டடிப்புகள், உட்சேர்ப்புகள் குறித்து மக்களுக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மாவோயிஸ்ட் அனுதாபியான கிறிஸ்தவ பாதிரி ராஜ் மரியசூசையை நியமித்து அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது தமிழக அரசு.

தற்போது அந்த வரிசையில், பெண்கள் தொடர்பான ‘மீ டூ’ சர்ச்சையில் சிக்கியவரும், பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா ஆகியோரை தரக்குறைவாக விமர்சிப்பவருமான வருமான வரித் துறை அதிகாரி சரவணனை தமிழ்நாடு பாடநுால் நிறுவன அலுவல் சாரா கல்வி குழு உறுப்பினராக நியமித்துள்ளது தி.மு.க அரசு. பல கல்வியாளர்கள் அமர்ந்து, பாடதிட்டங்களை வகுக்க அரசுக்கு ஆலோசனை அளித்த உயர்ந்த இடங்களில் இது போன்றவர்களின் நியமனம் ஆபத்தானது. அவர்களை தமிழக அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டு. அவ்விடங்களில் பண்பு உயர்ந்த தேசப்பற்று உடைய சிறந்த கல்வியாளர்களை நியமித்து மாணவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

‘அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு’ என்ற திருக்குறளை தமிழக அரசு நினைவில் கொள்வது நல்லது.