பசுமை ரயில்கள்

பாரீஸ் தட்பவெப்ப நிலை ஒப்பந்தம் 2015ன்படி, பசுமை வாயு வெளியீட்டை குறைக்க தேசிய ஹைட்ரஜன் தொலைநோக்கு திட்டம், மேம்பட்ட வேதியியல் மின்கல பயன்பாடு ஆகியவற்றை முன்னெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகமும் வரும் 2030க்குள் பசுமை ரயில் போக்குவரத்திற்கு மாற திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியன் ரயில்வே, ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி ரயில்களை இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. முதல் முறையாக ஹரியானா மாநிலத்தில் ‘டெமு’வகை ரயிலில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.