காவல்துறையில் பயங்கரவாதிகள் ஊடுருவல்

கேரளாவில் உள்ள காவல் துறையில் உளவாளியாக பல்வேறு மாநிலங்களில் தடைசெய்யபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பினர், அவர்களின் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியின் அமைப்பினரின் சார்பு உறுப்பினர்களும் ஊடுருவி உள்ளனர் என்ற செய்தி வெளியாகி உள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பற்றிய கேரள காவல்துறை தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பு காரணங்களுக்கு சேகரித்து வைத்துள்ளனர். அதை இவர்கள் அடிப்படைவாத அமைப்புகளுக்கு கசிய விட்டுள்ளனர். இதுவரை 135 ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டு உள்ளது என கேரள பத்திரிக்கையான ஜென்மபூமி 25.12.2021ல் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறையில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் இருப்பது புதிய நிகழ்வு அல்ல. 2018ம் ஆண்டில் காவல்துறை வட்டாரங்களில் ‘பச்சை விளக்கு’ என்ற வாட்ஸ் அப் குழு இயங்கி வந்துள்ளது. இது ஜிஹாதி நடவடிக்கைகள் சம்பந்தமாக பரப்புரையை மிக ரகசியமாக செய்து வந்துள்ளது. முஸ்லிம் அல்லாத பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றும் ‘லவ் ஜிகாத்’ செய்யும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயல்களை புகார் அளிக்க பெற்றோர்கள் காவல் நிலையம் சென்றால் அவர்கள் அர்தற்கு உதவுவது இல்லை என்பது என ஏற்கனவே பல நீதிமன்ற வழக்குகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதனல், காவல் துறையிலும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்பது தெரியவருகிறது.