2022 காலண்டரில் பயங்கரவாதி

முஸ்லிம் அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி ஹிந்தின் இளைஞர் பிரிவான கேரளாவை சேர்ந்த சாலிடாரிட்டி யூத் மூவ்மென்ட் அமைப்பு, சமீபத்தில் 2022ம் ஆண்டிற்கான காலண்டரை வெளியிட்டுள்ளது. அதில், பயங்கரவாதி யாகூப் மேமனை அந்த அமைப்பு ‘தியாகி’ என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக, யாகூப் மேமன் மீது குற்றச் சதி, பயங்கரவாதச் செயலுக்கு உதவுதல், ஊக்கப்படுத்துதல், சட்ட விரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச் சென்றது மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் வெடிபொருட்களை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஜூலை 27, 2007 அன்று மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் என்பது பாரத்த்தில் உள்ள ஒரு இஸ்லாமிய அமைப்பு. இது ‘ஜமாத்-இ-இஸ்லாமி’யின் கிளையாக நிறுவப்பட்டது. மத்திய அரசு இந்த அமைப்பை இரண்டு முறை தடை செய்துள்ளது என்பது நினைவு கூரத்தக்கது.

(செய்தி ஆதாரம்: https://www.newsbharati.com/Encyc/2022/5/20/Yakub-Memon.html)