அவமதிக்கப்பட்ட தேசியக்கொடி

குஜராத் மாநிலம் மோரை கேட் அருகே லியாகத் கான் என்பவரின் திறந்தவெளி குடோன் உள்ளது. அப்பகுதி மக்கள் அவ்வழியாக சென்றபோது குப்பை குவியலில் தேசியக்கொடி மற்றும் ஸ்ரீராமர், ஹனுமான் படம் பதித்த பேனர் துணிகளில் குப்பைகள் மூட்டைகள் கட்டப்பட்டிருப்பதை கண்டனர். உடனடியாக அப்பகுதி விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் நரேந்திர பயக்கிடம் அதனை தெரிவித்தனர். நரேந்திர பயக் அளித்த புகாரின் பேரில், அங்கு வந்த காவல்துறையினர் சோதனை நடத்தியதில், 30 தேசியக் கொடிகள், 12 ஸ்ரீ ராமர் பட பேனர்கள், ஸ்ரீ ராமர் மற்றும் ஹனுமான் உருவப்படம் கொண்ட 4 பேனர்கள், மேலும் சில பிற மத பேனர்களிலும் குப்பைகள் கட்டப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றினர். லியாகத் கானை கைது செய்தனர். லியாகத் கானிடம் நடத்திய விசாரணையில், சூரத்தில் உள்ள ஒரு ஜவுளி ஆலையில் குப்பைகளை பெற்ற வியாபாரி ஒருவரிடம் இருந்து அவர் அதை வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த மில் உரிமையாளரும், வியாபாரியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.