அரசுப் பிடியில் இருந்து விடுபடும் கோயில்கள்

கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களைப் போலவே ஹிந்து கோவில்களையும் விடுவிப்பதற்கான கோரிக்கைகள் ஹிந்து சமூகத்தால் பல காலமாக வைக்கப்பட்டு வருகின்றன. இந்த கோரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் கஞ்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ​​அமித் ஷா, ‘கோயில்கள் தொடர்பான விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என்றும் அவற்றின் நிர்வாகம் பக்தர்களிடமே விடப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு நம்புகிறது’ என கோயில்கள் தொடர்பான பா.ஜ.கவின் கொள்கையை எடுத்துரைத்தார். மேலும், ‘சபரிமலை உள்ளிட்ட அனைத்து கோயில்களையும் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சபரிமலை கோயிலைத் தீட்டுப்படுத்தும் முயற்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர், ரெஹானா பாத்திமா போன்றவர்களை கேரள காவல்துறையினர் உதவியுடன் காவலர்கள் உடையில் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சி நமது கலாச்சாரத்தையும் மரபுகளையும் அழிக்க தயாராக உள்ளது. புனிதமான சபரிமலை கோயிலுக்கு வருகை தந்த ஐயப்ப பக்தர்கள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் பாரதத்தில் வேறு எங்கும் நடந்திருக்காது. இவர்களுக்கு இஸ்லாமிய ஜிஹாதிகள் உதவுகிறார்கள். அவர்கள் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியில் ஊடுருவியுள்ளனர். அதிகாரத்தின் மிக உயர்ந்த பதவிகளில் கூட அமர்ந்துள்ளனர்’ என பேசினார்.