கோயில் சிலைகள் டிஜிட்டல் அருங்காட்சியகம்

தமிழக கோயில் சிலைகளை, இணையம் வாயிலாக, முப்பரிமாண வடிவில் பார்வையிட காவல்துறை சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. சென்னை ஐ.ஐ.டியுடன் இணைந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை இந்த டிஜிட்டல் அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் மீட்டுள்ள 36 பஞ்சலோக சுவாமி சிலைகள், 265 கற்சிலைகள், 73 மரச்சிலைகள் உட்பட 374 சிலைகளை, www.tnidols.com என்ற இணையதளம் வாயிலாக பொது மக்கள் முப்பரிமாண வடிவில் பார்வையிடலாம். இதைத் தவிர, பழங்கால சிலைகள் குறித்து ஆய்வு செய்ய, புதிய மென்பொருள் ஒன்றையும் உருவாக்கி வருகிறது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை.