தேஜாஸ் மார்க் 2

லகுரக தேஜாஸ் போர் விமானத்தின் மார்க் 1 ரகம் இந்திய விமானப்படையில் ஏற்கனவே இணைக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களை வாங்க மலேசியா, அர்ஜென்டினா நாட்டு விமானப்படைகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் மார்க் 2 ரகத்தை நோக்கி தன் அடுத்தக்கட்ட பயணத்தை தேஜாஸ் போர் விமானம் துவங்குகிறது. இது இரட்டை என்ஜின் கொண்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக இருக்கும். துணை விமானப்படை அதிகாரியான தளபதி ஏர் மார்ஷல் நம்தேஷ்வர் திவாரி தலைமையிலான குழு மார்க் 2 ரக தேஜாஸிற்கான வடிவத்திற்கு இறுதி ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை தொடர்ந்து வரும் 2023ம் ஆண்டு பாரதத்திலேயே தேஜாஸ் மார்க் 2 ரக போர் விமானத்தின் கட்டமைப்புப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.