டாடா கம்யூனிகேஷன்ஸ் தரவுகள் கசிவு

பேஸ்புக், மொபி க்விக் போன்ற பெரிய நிறுவனங்களில் நடைபெற்ற தகவல் திருட்டையடுத்து தற்போது பாரதத்தில் உள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சுமார் 50 ஜி.பி அளவுள்ள பல்வேறு தகவல் தரவுகளை திருடியுள்ளனர் ஹேக்கர்கள். இந்த தகவல்களை 9.000 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பிட் காயின்களுக்கு விற்கவும் முனைந்துள்ளனர். இந்த தகவலை அவர்கள் ஏற்கனவே பல்வேறு நபர்களுக்கு விற்றிருக்கலாம் என்றும் இது தொடர்ச்சியான மறு விற்பனையாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகின்றனர்.