பயங்கரவாதிகளின் புகலிடமாகும் தமிழகம்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில், “தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக உளவுத் துறை ஆழ்ந்த உறக்க நிலையில் உள்ளது. இதனால், தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு குறித்த முதல்கட்ட விசாரணையில், ஷரீக் போலி அடையாள அட்டையை காட்டி, கோவையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. கோவை கார் வெடிப்பு ஒரு பயங்கரவாத செயல் என்று பா.ஜ.க ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது. அரசு அதை தொடர்ந்து மறுக்கிறது. ஷரீக் கோவையில் தங்கியது மற்றும் தண்டனையின்றி செயல்படும் பயங்கரவாதிகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு குறித்து பா.ஜ.க சந்தேகம் எழுப்புகிறது. அதையும் அரசு மறுக்கிறது” என தெரிவித்துள்ளார்.