நூலகத்தை எரித்த சையத் நசீர்

மைசூருவில் உள்ள சையத் ஐசக்கின் நூலகம், மிகப் பிரபலம். தான் படிக்கவில்லை என்பதால் தான் படும் கஷ்டங்களை பிறர் படக்கூடாது என சிந்தித்த ஏழை தொழிலாளியான சையத் ஐசக், கஷ்டப்பட்டு ஒரு நூலகத்தை உருவாக்கினார். பிறப்பால் ஒரு முஸ்லிமாக இருந்தும் அனைத்து மத்த்தினரிடமும் அன்பு பாராட்டும் இவரது மத நல்லிணக்க குணத்திற்கும், நூலக சேவைக்கும் அனைவராலும் பாராட்டப்பட்டவர் ஐசக். இவரது இந்த நூலகத்தில் விதவிதமான பகவத் கீதையின் 3000 பிரதிகள் உட்பட சுமார் 11000 புத்தகங்கள் இருந்தன. அந்த நூலகம் ஏப்ரல் 9 அன்று அதிகாலையில் மர்ம நபரால் தீ வைக்கப்பட்டு எரிந்து சாம்பலானது. இந்த செய்தி சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இது எரிக்கப்படுவதற்கு சில மதவாத கோணங்கள் இருந்ததையும் யாரும் மறுக்க முடியாது. இது குறித்து விசாரித்த மைசூரு காவல்துறை, கடந்த சனிக்கிழமை அன்று சையத் நசீர் என்பவரை கைது செய்தது. காவல்துறை கமிஷனர் டாக்டர் சந்திரகுப்தா ‘35 வயதான சையத் நசீர் அந்த நூலகத்தில் எரியும் சிகரெட்டை வீசினார். இதனால் அந்த நூலகம் தீப்பிடித்தது என தெரிவித்துள்ளார். இந்த நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்ப பணம் சேகரிக்க ஒரு சமூக ஊடக பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதற்கு மக்களிடம் பெரும் ஆதரவு இருந்தது. இதுவரை இதற்கு சுமார் 30 லட்சம் ரூபாய் நன்கொடையை பொதுமக்கள் அளித்துள்ளனர்.