கொரோனா ஒழிப்பில் ராணுவம்

பாரதத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘ராணுவம், டி.ஆர்.டி.ஓ உள்ளிட்ட ராணுவ அமைப்புகள், தங்களிடம் உள்ள நிபுணர்கள், சிகிச்சை வசதிகளை மக்களின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ராணுவ கமாண்டர்கள், சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை சந்தித்து, இதற்கு தேவையான உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்யும்படி, ராணுவ தளபதி நரவானேவுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதனையடுத்து, முதற்கட்டமாக ராணுவ குடியிருப்புகளில் உள்ள மருத்துவமனைகளில், பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் பாதுகாப்பு செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.