சூரியனை வழிபட சூரிய நமஸ்கார்

தைத்திருநாளான திருநாளான பொங்கல் பண்டிகை, மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என விஷேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உலகம் முழுவதும் 75 லட்சம் மக்கள் பங்கேற்கும் சூரிய நமஸ்கார நிகழ்ச்சிக்கு ‘ஆயுஷ் அமைச்சகம்’ ஏற்பாடு செய்துள்ளது. ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்கியதற்காக இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த நன்நாளில், அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வளிக்கும் சூரியனை வணங்கும் விதத்தில் ஏழரை கோடி ‘சூரிய நமஸ்காரம்’ மேற்கொள்ளப்பட உள்ளது. பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவை குறித்த செய்திகளைத் தாங்கியும், கார்பன் உமிழ்வை குறைக்கும் வகையில் சூரிய சக்தி மின்சாரம் போன்ற பசுமை எரிசக்தியை பிரபலப்படுத்தும் வகையிலும் இந்த சூரிய நமஸ்காரம் நடத்தப்படுகிறது. பொங்கல், மகரசங்கராந்தி என்று அழைக்கப்படும் இவ்விழாவில் நமது தேசத்தின் கலாச்சார, ஆன்மீக பாரம்பரியத்தை வெளிக்காட்டும் விதத்தில் நாம் அனைவரும் தவறாமல் கலந்துகொள்வோம்.