பி.எம்.எஸ் போராட்டம்

மத்திய அரசின் தனியார் மயக் கொள்கையை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும் என்று பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் இப்போராட்டத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பாதிக்கப்படக்கூடிய சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள். வரும் பிப்ரவரி 11,12,13 தேதிகளில் ஓடிசாவில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் நவம்பரில் நடைபெறும் இந்த போராட்டதிற்கான தேதிகள் முடிவு செய்யப்படும். இது குறித்து பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவிக்கப்படும். இப்போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு பகுதிகளில் ஏழு கருத்தரங்குகள் நடத்தப்படும். முதல் கருத்தரங்கு ஹைதராபாத்தில் நடைபெற்றது. மீதமுள்ள கருத்தரங்குகள் லக்னோ,போபால்,பெங்களுருவில், ராஞ்சியில் நடைபெறும்’ என என்று பி.எம்.எஸ் செயலாளர் கிரிஷ்சந்திர ஆச்சர்யா தெரிவித்துள்ளார்.