ஸ்டாலினுக்கு உதவுமா பிராம்ப்டர்

முதல்வர் முதல் நெட்டிசன்கள் வரை, ஸ்டாலினின் துண்டு சீட்டை பற்றி பேசாதவர்களோ விமர்சிக்காதவர்களோ இருக்க முடியாது.  கையில் துண்டு சீட்டு இருந்தாலும் ஸ்டாலின் பேசும் தப்பும் தவறுமான வார்த்தைகளை வைத்து மீம்ஸ் போட காத்திருக்கும் கூட்டம் பெரியது. ஸ்டாலினுக்கு அரசியல் உத்திகளை வகுக்க வழிகாட்டும் ஐ-பேக் நிறுவனம் இந்த தவறுகளை தவிர்க்க தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளது. ஒபாமா, பிரதமர் மோடி போன்றோர் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் ‘பிராம்ப்டர்’ கருவி இந்த பிரச்சனையை தீர்க்கும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்கள் கேமிராவை பார்த்து செய்தி படிப்பார்கள். அதில் செய்திகள் எழுத்து வடிவில் அவர்களுக்கு மட்டுமே தெரியும். எதிரில் இருக்கும் நமக்கு தெரியாது. இந்த தொழில்நுட்பம்தான் ‘பிராம்ப்டர்’.  இனி நெட்டிசன்களுக்கு மீம்ஸ் போட ‘கன்டண்ட்’ ஸ்டாலினிடம் இருந்து கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.