சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, 2008 மாலேகான் குண்டுவெடிப்பை, காவி தீவிரவாதம், ஹிந்து பயங்கரவாதம் என கூறி ஹிந்துக்களையும் ஹிந்து மதத் தலைவர்களையும், ஹிந்து அமைப்பினரையும் இழிவுபடுத்தும் நோக்கில் பெரிய சதி வலையை பின்னியது. இந்நிலையில், 2008ம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் சாட்சி ஒருவர், என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் யோகி ஆதித்யநாத், இந்திரேஷ் குமார் உட்பட நான்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களை இதில் சம்பந்தப்படுத்த தன்னை அன்றைய ஏ.டி.எஸ் தலைவர் கட்டாயப்படுத்தி, மிரட்டி, சித்ரவதை செய்ததாகவும் தன் குடும்பத்தை சித்திரவதை செய்து சிக்க வைக்க முயன்ரதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மன்மோகன் சிங், சோனியா காந்தி இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரும் முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் புரவலருமான இந்திரேஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.