தவறிழைக்கும் சோம்நாத் அறக்கட்டளை

குஜராத் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சோம்நாத் கோயிலின் அறக்கட்டளை அதன் பக்தர்கள் வசதிக்காக, ரூ. 500 செலவில் சோம்நாத் – டையு தொகுப்பு சுற்றுலா வசதியை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று முதல் துவங்கப்பட்ட இந்த சுற்றுலாவில் டையூவில் உள்ள, சுமார் 400 ஆண்டுகள் பழமையான கத்தோலிக்க செயின்ட் பால் தேவாலயமும் இடம் பெற்றுள்ளது. இது அங்கு வரும் ஹிந்து பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதத்தை ஆண்ட ஆங்கிலேயர்களைவிட மிகவும் வெறித்தனமாகவும் ஆக்ரோஷத்துடனும் கிறிஸ்தவத்தை பரப்பியவர்கள் போர்த்துகீசியர்கள். அவர்கள் குடியேறிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடி ஹிந்துக்கள் மீது, குறிப்பாக ‘கோன் விசாரணையின் போது’ பல வன்முறைகளை ஏவிவிட்டு சித்திரவதைகளைச் செய்தவர்கள் இவர்கள் என்பது வரலாற்றை அறிந்த எவருக்கும் தெரிந்திருக்கும். அப்படிபட்டவர்கள் கட்டிய ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை இந்த சுற்றுலாவில் சோம்நாத் கோயில் நிர்வாகம் சேர்த்திருப்பது ஒரு தவறான முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.