வீரர்கள் பிரான்ஸ் அரசுக்கு எச்சரிக்கை

பிரான்ஸில் தற்போதைய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசு முஸ்லிம்களுக்கு காட்டும் சலுகைகள் விரைவில் ஒரு உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும் என முன்னாள் படை வீரர்கள் எச்சரித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். கன்சர்வேட்டிவ் மேகஸின் என்ற பத்திரிகை இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது. முன்னதாக, இதே போன்ற ஒரு கடிதத்தை முன்னாள் தளபதிகள் 18 பேர் அரசுக்கு எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு ராணுவ அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, ‘படைகள் பிரச்சாரம் செய்ய அல்ல, பிரான்ஸைப் பாதுகாக்க உள்ளன, இது ஒரு சூழ்ச்சி’ என்று கூறியுள்ளார். ஆனால், கடந்த வாரம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 58 சதவீத பிரெஞ்சு மக்கள் படை வீரர்களின் கடிதத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.