மென்திறன் கலைக்கு மெருகேற்றும் கல்வி

நல்ல படிப்பும், அனுபவமும் மட்டுமே எல்லா நேரங்களிலும் நன்மதிப்பை நமக்கு பெற்றுத்தந்து விடுவதில்லை. அதற்கு மேலும் காலத்துக்கு தக்கபடி புதிய விஷயங்கள் தேவைப்படுகிறது. படிக்காமலேயே இயல்பாய் மேதை ஆகி மற்றவர் மனம் போற்றும் வகையில் சிறந்து வாழுகிறவர்கள் சிலர் இருக்க, அலுவலக நிமித்தமாகவோ, விழாவிலோ நாம் பிறரைச் சந்திக்கும்போது நமது தோற்றம் மட்டுமின்றி அவர்களிடம் நாம் நடந்துகொள்ளும் விதமும்தான் நம்மைப் பற்றிய சிறந்த ‘இமேஜை’ அவர்களிடம் ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்று.

நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே மருத்துவர் ஆகப் போகிறோம் அல்லது பொறியாளர் ஆகப் போகிறோம் என்கின்ற பல வடிவங்கள் கொடுத்து கனவுக் கோட்டையைக் கட்டத் தொடங்கிவிடுகிறோம். குறிக்கோள் நிறைவேறும் வரை கண்டிருந்த கனவை நிறைவேற்றுவதில் வெறித்தனமமும் காட்டி விடுகிறோம். பற்பல நடைமுறைப்படுத்தல் கூறுகளை நமது குறிக்கோள்களை எட்டும் இடைக்காலத்தில் பயன்படுத்துகிறோம். பேச்சுக் கலை, எழுத்துக்கலை, நம்மை மற்றோர் முன் எடுப்பாகக் காட்டிக்கொள்ள தூய, சிறந்த உடை நாகரிகத்தை பின்பற்றுதல், நேர மேலாண்மை போன்றவை – இவற்றில் சில.

கனவு நிறைவேறுவது ஒருபுறம் இருக்கட்டும், சிலர் மேற்சொன்னதிட்டங்களை இயல்பாகவே தங்களுக்குள் வகுத்துக்கொண்டு முன்னேற்றப் படிகளைத் தொடர்ந்து கடந்து கொண்டே இருப்பார்கள். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர், காமராஜர், ஜெயலலிதா போன்ற சிறந்த தலைவர்களுக்கு ஏதாவது பள்ளிக்கூடத்தில் பயிற்சி என்று ப்ரத்யேகமாகச் சொல்லிக்கொடுக்கவில்லை. பிற உதாரண புருஷர்களின் வாழ்க்கை முறைகளை படித்து, கேட்டறிந்து, அவர்கள் நடவடிக்கைகளை உற்று நோக்கி அவர்களை போன்றே தங்களையும் வரித்துக்கொண்டு, அவர்களாகவே தங்கள் இதர பணிகளுக்கு இடையே கற்றுக்கொண்டததுதான் – தம்மை மற்றவர் முன் சிறந்தவராக முன்னிறுத்தும் இமேஜ் என்ஹான்சிங் (image enhancing) அல்லது “இமேஜ் மேக் ஓவர்” குணம். தம்மை மற்றவர் முன் சிறந்தவராக முன்னிறுத்தும் கலை இமேஜ் என்ஹான்சிங்(image enhancing) அல்லது “இமேஜ் மேக் ஓவர்”

இக்கல்வியைப் புகட்ட சென்னை போன்ற பெரு நகரங்களில் பிரத்யேகமாக கல்விக்கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தந்த கல்விக்கேற்ற பட்டய சான்றி தழ்களையும் இவை வழங்கி வருகின்றன. நல்லா பேசத் தெரிந்தால், இடத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துக்க தெரிந்தால் போதும், சூப்பர் பர்சனலாட்டி ஆகிடலாம் என எண்ணுகின்றனர். ஒரு நபரின் ஆளுமை அவரது தோற்றம், நடத்தை, அணுகுமுறை, கல்வி, மதிப்புகள் போன்ற மாறுபட்ட பண்புகளால் தீர்மானிப்பதே பெர்சனாலிட்டி. மிகப்பெரிய ஆளுமைகளை எடுத்துக்கொண்டால் எப்போதும் தனித்துவமான ‘பெர்சனாலிட்டி’யை கொண்டிருப்பார்கள். ஏன் அது நம்மால் முடியாதா? முடியும்

கல்வி
சமூக திறன்களை வளர்த்து கொள்ளும் அதே நேரம், சரியான பார்வை மட்டுமே நமது தனிப்பட்ட / அலுவலக உறவுகளுக்கு உதவி செய்ய உறுதுணை புரியாது. மற்றவர்களுடன் பழகும் போது நேர்மறையான அணுகுமுறையை கடைப்பிடித்தல், கூடவே நமது உடல்மொழியையும் பயன்படுத்துதல், சமூக தொடர்புகளை புறக்கணிக்காத தன்மை, ‘நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்’ என நம்மை நாமே நினைத்துக் குழப்பும் தன்மையைத் தூக்கி எறிதல், இவையெல்லாம் இந்தத் திறன் வகுப்புகளில் கற்றுக் கொடுக்கிறார்கள். தவிர, ஒரு சிறந்த நிர்வாகி பலதரப்பட்ட ஊழியர்கள், வெண்டார்கள், இவர்களோடு அனுதினம் பழகும் போது அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், அவர்களை சிலநேரங்களில் வேலை பளு என்று உணர்வோருக்கு அப் பளு நினைப்பை குறைக்க சிரித்துப் பேசுவது, அதே நேரம் யாரையும் காயப்படுத்திவிடவும் செய்யமாட்டார்கள். இன்முகத்துடன் உரையாடும் திறன் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கிறர்கிறார்கள்.

விளைவு
இயல்பாகவே நம் பால் மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள். வாய்ப்புகள் நம்மைத் தேடி வராது நாம்தான் வாய்ப்புகளை தேட வேண்டும். பல்வேறு வகையான நிகழ்வுகளுக்குச் செல்வதன் மூலம் நம்மை நாமே கூர்தீட்டிக்கொள்ள முடியும். நம்மை நினைத்து நாமே பெருமைப் பட்டுக்கொள்வதால் நமது நம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும் யுக்திகளையும் இந்த வகுப்புகளில் கற்றுக் கொடுக்கிறார்கள். எங்கு எந்தவித உடை அணிய வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அலுவலகம் செல்ல என்ன விதமான உடை அணிய வேண்டும், விழாக்களுக்கு என்ன அணிய வேண்டும் என்பது தெரிந்திருப்பது மிக, மிக அவசியம். நம்முடைய சரியான பார்வை ஆளுமைக்கு கூடுதல் வலு கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்கு நம்முடைய உடை எவ்வளவு பலம் சேர்க்கிறது என்பது முக்கியம் நம்மால் என்ன முடியும்: ஒவ்வொரு நபருக்கும் ஒரு பாஸிட்டிவ் பாண்ட் இருக்கும். அதை சரியாக அறியும்பட்சத்தில் எத்தகைய சவால் வந்தாலும், சமாளிக்க இது ஒரு படிக்கல்லாக இருக்கும்.

இனிமையான பேச்சின் மூலம் நம்மை நாமே ‘பிராண்ட்’ செய்ய முடியும் என்பது இவற்றின் செயலாக்க பாடங்களில் ஒன்று. எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அது நமது ஆளுமையின் ஒரு பகுதியாகும். நமது நேர்மறையான எண்ணங்களின் மூலம் நாம் யார் என்பதை பிரதிபலிக்கிறோம். தவறுகளைச் செய்வது பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு நமது பயணத்தில் தவறுகள் ஒரு சிறிய சறுக்கல் அவ்வளவுதான். சறுக்கல்கள் நமது முன்னேற்றப் படிகளுக்குமான கற்கள். வெற்றிக்கான சிறு குறிப்புகளாக தோல்விகளை கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார்கள்.

வியர்வைகளினால் விழையும் வெற்றியின் சுவையே நிரந்தரமானது போல வெற்றியை சுவைக்க வேண்டுமானால் கடுமையான உழைப்பு வேண்டும் அதுவரை எந்த தடைகள் வந்தாலும் தயங்கிவிடக் கூடாது என்றும், நாம் எதை கற்றுக் கொண்டாலும், நமக்கு கொஞ்சம்தான் அந்தத் துறை பற்றி தெரிந்திருந்தாலும், பரவாயில்லை அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் உள்ளது. நாம் கிங்கா? கிங் மேக்கரா? என்பது இத்தகைய கல்வியில் சிறப்பான பக்கங்கள்.