துணிந்தவனுக்கு தோல்வியில்லை

சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட்ப்போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார் சிவாஜி. தாய் ஜிஜாபாய் சொன்ன வீர‌க்கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும்,  ஹிந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஊக்கம் தந்தன.

‘‘மாபெரும் படை கொண்ட முகாலையர்களை என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் சொன்ன வார்த்தை, ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.

ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை, துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.  துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.

சிவாஜியின் கோட்டையின் முன் முகலாயர் படை பெரும் கடெலன நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால், சிவாஜி நிராயுதபாணியாக பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்தான் தளபதி அப்சல்கான். தனிமையில் போக‌ வேண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னகைகத்தவாறு பகைவனைத் தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த அப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா பெரும் படையுடன் வந்திருக்கிறேன்’’ என்றபடி தன்னுடைய வாளை சிவாஜியின் மார்பில் செலுத்தினான். கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து,  தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.

1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற அவரது தாரக மந்திரம்தான்.

சத்ரபதி சிவாஜியின் பிறந்த தினம் இன்று.