செந்தில் பாலாஜிக்கு வழக்கு விசாரிக்கப்படும்

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 2011 அ.தி.மு.க ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வேலைவாங்கி தருவதாக 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. புகார்தாரர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுத்து பிரச்சனையை சுமூகமாக தீர்த்து கொண்டதால் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையேற்ற உயர்நீதிமன்றம் இந்த வழக்கை 2021ல் ரத்து செய்தது. இந்த விவகாரம் அப்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அப்போது தி.மு.க ஆட்சி நடைபெற்றது நினைவு கூரத்தக்கது. மற்றொரு விவகாரத்தில் பொறியாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட காவல்துறை தரப்பு சாட்சியாக இருந்த தர்மராஜ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், அமைச்சருக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாகவும், பணமோசடி வழக்கை தொடர்ந்து உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.