மதவெறி பயங்கரவாதி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2008ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 11 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனையும் 38 பயங்கரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான சஃப்தர் நகோரி, ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் குரானை மட்டுமே நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியை சேர்ந்த இவர், தடை செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான ஸ்டூடண்ட்ஸ் இஸ்லாமிய இயக்கம் ஆஃப் இந்தியா (சிமி) பொதுச் செயலாளராக இருந்தார். அகமதாபாத் குண்டுவெடிப்பின் முக்கிய சதிகாரர். குண்டுவெடிப்புக்கு வெடிபொருட்களை ஏற்பாடு செய்தவர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியவர். அவரது தந்தை மத்தியப் பிரதேச காவல்துறையின் குற்றப்பிரிவில் உதவி உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர். நகோரி மூளைச்சலவை செய்வதில் நிபுணர். போபால் மத்திய சிறையில் இருந்தபோது காவலர் ஒருவரை பேசிப்பேசியே முஸ்லிம்மாக மதம் மாறச் செய்தார். பிறகு காவலர் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்.