சத்குருவின் செயல் விலைமதிப்பற்றது

பாரதத்தில் 6வது மாநிலமாக தெலுங்கானா அரசு, தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையிலான  ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா வேளாண் துறை அமைச்சர்சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டியும் சத்குருவும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அம்மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர்ஸ்ரீனிவாஸ் கௌட், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தயாகர் ராவ், நடிகை சமந்தா, தெலுங்கு பாடகர்கள் ராம் மிரியாலா, மங்கலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மண் காப்போம் இயக்கத்திற்கு அம்மாநில அரசின் முழு ஆதரவை தெரிவித்த வேளாண் அமைச்சர், “சத்குரு, மண் வளத்தை மீட்டெடுக்கும் விஷயத்தில் நாங்கள் உங்களுடன் 100 சதவீதம் உடன்படுகிறோம். உங்களுடைய வழிகாட்டுதல்களை பின்பற்றி, அதை நடைமுறைப்படுத்துவோம்.தனி நபர்களின் தார்மீகப் பொறுப்புணர்வு மற்றும் அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வின் மூலம் நம்மால் மண்ணை காப்பற்ற முடியும்.இந்தப் பொறுப்புணர்வை உருவாக்குவதில் சத்குருவின் செயல் விலைமதிப்பற்றது; பாராட்டுக்குரியது” என்றார்.