சார்க் மாநாடு ரத்து

தெற்காசிய நாடுகளான பாரதம், பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகள் அடங்கிய சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு வரும் 25ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருந்தது. இவ்வருடம் இந்த மாநாட்டிற்கு, நேபாளம் தலைமை ஏற்றது. இந்நிலையில், ஆப்கனை வன்முறை வழியில் கைப்பற்றி ஆட்சி அமைத்த தலிபான் பிரதிநிதிகளையும், இந்த மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது. ஆனால், இதற்கு பாரதம் உட்பட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஒருமித்த முடிவு எடுக்கப்படவில்லை. இதனையடுத்து இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.