கிராமப்புற மின்சார திட்டம்

மத்திய அரசின் சௌபாக்கியா (பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா) திட்டம் கடந்த 2017 செப்டம்பர் 25ல் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. எல்லையோர கிராமங்கள், மலைப்புற குக்கிராமங்கள், நகர்புரத்தில் உள்ள மின்சாரம் இல்லாத எழைகள் வீடுகள் என அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். தீன்தயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா (DDUGJY) உடன் இணைந்து துவக்கப்பட்ட இந்த பயணத்தால் கடந்த மார்ச் 31ம் தேதிவரை, மின்சாரம் இல்லாத 2.82 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சார வசதி பெற்றுள்ளன. ஆரம்பித்த 18 மாதங்களில் சாதனை அளவாக மிகக் குறைந்த நேரத்தில் இந்த மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.