ஆர்.எஸ்.எஸ்.ஸின் புதிய பொது செயலாளர் தேர்வு

திரு. தத்தாத்ரேய ஹொசபலே அவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஸின் புதிய சர்கார்யவாஹ் ஆக பெங்களூரு வில் நடைபெற்று வரும் அகில பாரத பிரதிநிதி சபாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகம் ஷிமோகாவைசேர்ந்தவர். சிறுவயதில் இருந்தேஸ்வயம்சேவக். கல்லூரியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்த போது நெருக்கடிநிலை (1975) காலத்தில் மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தார். 1978 முதல் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் முழுநேரத் தொண்டராக பணியாற்றியவர். கர்நாடக மாநில ஏ.பி.வி.பி.அமைப்பு செயலாளர், தென் பாரத அமைப்பு செயலாளர், அகில பாரத பொது செயலாளர், அகில பாரத இணை அமைப்பு செயலாளர் இறுதியில் ஏ.பி.வி.பி. அகில பாரத அமைப்பு செயலாள ராக 1992-2003 வரை சிறப்பாக பணியாற்றியவர். பின்னர் 2003-09 வரை ஆர்.எஸ்.எஸ். அகில பாரத சஹ பௌதிக் பிரமுக்காகவும், தொடர்ந்து 2009 முதல் அகில பாரத சஹ சர்கார்யவாஹ்பொறுப்பேற்று நாடெங்கிலும் சுற்றுப்பயணம் செய்து கார்யகர்த்தர்களுக்கு வழிகாட்டியவர். தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத சர்கார்யவாஹ் ஆக பொறுப்பு ஏற்றுள்ளார்.