RIP தவிர்ப்போம்

இபோதெல்லாம் யாராவது இறந்துவிட்டால் உடனே  ‘RIP’ என ஹிந்துக்கள்கூட செய்தி அனுப்புவது வாடிக்கையாகிவிட்டது.

‘Rest In Peace’ என்பதன் சுருக்கமே ‘RIP’. இறந்தவர்கள் மறுமை நாளில் உயிர்ப்பிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை அந்த ஆன்மா ஓய்வாக இருக்கட்டும் என்ற அன்னிய மதங்களின் பிரார்த்தனையே இது.

நமக்கு நெருங்கிய கலாச்சாரம் கொண்ட பௌத்தர்களும் சமணர்கள் இதை ‘நிப்பான’ (பரிநிர்வாணப் பேரின்பத்தை அடைவாராக) என்கின்றனர்.

ஹிந்து பண்பாட்டில் பிறவிச்சுழல், நல்வினை, தீவினை கோட்பாடுகள் இருந்தாலும், ஒரு ஆன்மாவின்  இறுதி இலக்கு மோட்சம் எனும் வீடுபேறு. எனவே யாராவது இறந்தால் ‘மோட்சத்தை அடைவாராக’ ‘இறைவன் திருவடியில் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்’  என கூறலாம்.

சைவர்களும் வைணவர்களும் தேவைபட்டால் முக்தி, மோட்சம் என்பவற்றை கைலாயம், வைகுண்டம் என மாற்றிகொள்ளலாம். அதுவுமில்லை என்றால் இருக்கவே இருக்கிறது “ஆழ்ந்த இரங்கல்கள்”.