அறநிலையத்துறைக்கு கேள்வி

ஆலய வழிபடுவோர் சங்கம் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பல கோயில்களில் முறையான நியமன உத்தரவுகள் இன்றி, நிர்வாக அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இது சட்டவிரோதம்.

திருச்செந்துார், திருநெல்வேலி உள்ளிட்ட 40 கோயில்களில் எந்த உத்தரவும் இன்றி, நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். கோயில் நிர்வாகத்தில், நிதியில் முறைகேடுகள், சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன.

எனவே, நியமன உத்தரவின்றி பணியில் நீடிக்கும் நிர்வாக அதிகாரிகளிடம் இருந்து, கோயில் நிர்வாகத்தை, அறங்காவலர்களிடம் ஒப்படைக்கும்படி, அறநிலையதுறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்கும் படி, அறநிலைய துறை செயலர் மற்றும் ஆணையருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.