புத்துயிர் பெறும் நீர் நிலைகள்

அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரம்மாண்டமான கோயில் அமைவதையொட்டி, அங்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ராமாயண காலத்தோடு சம்பந்தப்பட்ட சுமார் 108 நீர்நிலைகளில் ‘லால் திகி, பதேஹ்கஞ்ச், சுவாமி ராம்ஜி தாஸ் ஆசிரம தலாப், சீதா ராம் மண்டி குண்ட் மற்றும் பிரம்மா குண்ட்’ உள்ளிட்ட ஐந்து முக்கியமான நீர் நிலைகளை ‘ஜல் தாரா’ திட்டம் மற்றும் ‘நமாமி கங்கே’ திட்டத்தின் கீழ், அபிவிருத்தி செய்ய ‘ஜல் சக்தி’ ஆணையம் முடிவெடுத்துள்ளது. அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் (ஏ.டி.ஏ) துணைத் தலைவர் விஷால் சிங் கூறுகையில், ‘அயோத்தி கலைத் திட்டத்தின் கீழ், ஒரு புதிய சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்படும், இது அன்றாட வாழ்க்கையில் கலையை ஒருங்கிணைக்கும். இந்தத் திட்டம் மக்களை தங்கள் சுற்றுச்சூழலையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க ஊக்குவிக்கும். கழிவு நீர், மழை நீர், வடிகால்கள் மற்றும் இயற்கை நீர்நிலைகளில் பாயும் கழிவுகள் அனைத்தும் சுத்திகரிக்கப்படும்’ என தெரிவித்தார்.