சட்டவிரோத பங்களாதேஷிகள் கைது

மகாராஷ்டிரா,பால்கர் மாவட்டத்தில் உள்ள சோதி கிராமத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேசத்தை சேர்ந்த ஏழு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்களிடம் முறையான ஆவணங்கள் ஏதுமில்லை என்பது தெரியவந்துள்ளது. பாரதத்தில் மியான்மர், வங்க தேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் சுமார் இரண்டரை கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று சந்தேகிகப்படுகிறது. எஸ்.டி.பி.ஐ, ஐ.யூ.எம்.எல், பி.எப்.ஐ போன்ற பல முஸ்லீம் அரசியல் கட்சிகள், அமைப்புகளால் இது போன்ற ஊடுருவல்காரர்கள் பாரதத்தில் தங்கவும் போலி ஆவணங்கள் பெறவும் உதவி செய்யப்படுகிறது. மேலும் இவர்களுக்கு வேலை, வீடு போன்ற உதவிகளும் செய்யப்பட்டு வாக்கு வங்கிகளாக மாற்றப்படுகின்றனர். இவர்களால் பாரதத்தில் பயங்கரவாதங்களும் வன்முறை செயல்களும் அதிகரிக்கின்றன என கூறப்படுகிறது. சமீபத்தில் கேரளாவில் 2 லட்சம் வங்க தேச முஸ்லிம்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர் என்று செய்தி ஒன்று தெரிவிக்கிறது.