மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பம்

பெங்களூருவில் பி.டி.ஐ  செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஜி மாதவன் நாயர், ‘மறுபயன்பாட்டுக்குரிய ராக்கெட் தொழில்நுட்பத்தை மாஸ்டரிங் செய்வதில் பாரதம் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும், உலகளாவிய சந்தைப்படுத்துதலுக்கு உந்துதல் கொடுக்க வேண்டும். வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கும், உலக சந்தையில் விண்வெளி தொடர்பான சேவைகளை வழங்குவதற்கும் ஒரு பரந்த வாய்ப்பு பாரதத்திற்கு உள்ளது. சர்வதேச விலைகளுடன் ஒப்பிடும்போது பாரதம் 30 முதல் 40 சதவீதம் குறைந்த செலவில் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளை வழங்குகிறது. இயற்கையாகவே, அத்தகைய திறன் இல்லாத நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ஏவுதளங்களைக் கைப்பற்றுவதற்கான நல்ல சாத்தியம் உள்ளது. நாம் மீட்டெடுக்கக்கூடிய, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுதள அமைப்புகளுக்குச் செல்லாவிட்டால், விண்வெளி போக்குவரத்துச் செலவைக் குறைக்க முடியாது’ என கூறியுள்ளார்.