ரிசர்வ் வங்கி நடவடிக்கை

இரண்டாவது கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்படும் கட்டுப்ப்பாடுகள், ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலை, கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் சிறு நிறுவனங்கள் மற்றும் அவசர கடன் வாங்குபவர்களுக்கு வசதியாகவும் ரூ. 50,000 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மருத்துவ வசதி தரும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளுக்கு வங்கிகள் தேவையான கடனளிக்க முடியும். இது குறித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், “நாட்டின் நிதி நிலைமை சரியாக, சந்தை செயல்பாடுகள் மீட்சியடைவதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி போர்கால நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது, இந்த தாக்கத்தை சரிசெய்ய நாங்கள் அரசுடன் நெருக்கமான ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்று கூறினார்.