கண்ணகி கோயிலை மீட்க கோரிக்கை

தேனி மாவட்டம் கூடலூர் பளியன்குடியில் இருந்து 6 கி.மீ தொலைவில் விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலுக்குச் செல்லும் வாகனப் பாதை கேரள வனப்பகுதி வழியாக இருப்பதால் கோயிலை கேரளா உரிமை கொண்டாடி வருகிறது. கேரள அரசிடம் இருந்து இக்கோயிலை மீட்டு சீரமைப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக வனப்பகுதியில் இருந்து 6 கி.மீ தூரம் தற்போதுள்ள நடைபாதையில் நல்ல சாலை வசதி ஏற்படுத்தினால் தமிழக பக்தர்கள் தடை இன்றி இக்கோயிலுக்கு சென்று வர முடியும். கோயில் பராமரிப்பின்றி அழியும் ஆபத்தில் உள்ளது’ என பா.ஜ.க மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே. நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.