நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை

2019ல் நடைபெற்ற கும்பமேளாவிற்கான பணிகள் சிலவற்றை மத்திய அரசின் ஒத்துழைப்போடு உத்தரபிரதேச அரசு மேற்கொண்டது. அப்போது, அம்மாநில அரசு 13 அகாராக்கள் மற்றும் சில மடங்களில் வசதிகளை மேம்படுத்தித் தந்துள்ளது. இதில் மத்திய அரசின் ஜல் நிகாரம் நிறுவனமும் இணைந்து பணிகளை மேற்கொண்டது. இதற்கான நிதி சம்பந்தப்பட்ட அரசுகளால் வழங்கப்பட்டது. இதில்,  ஜீயர்களுக்கோ அல்லது அகாராக்களுக்கோ எவ்வித தொடர்பும் கிடையாது. எனினும் 13 அகாராக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாரத குடிமக்கள் அனைவரும் தாங்கள் பெறும் நிதி அல்லது பராமரிக்கும் கணக்கிற்கு அரசுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை உண்டு. ஆனால் எந்த நிதியையும் பெறாத நாங்கள் இதற்கு எப்படி விளக்கம் அளிக்க முடியும். ஹிந்து தர்மத்தைக் கடைபிடிப்போரை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மடாதிபதிகள், ஜீயர்கள் மற்றும் சாதுக்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் அமைப்பாக அகிலபாரதிய சந்த் சமிதியின் பொதுச் செயலரான சுவாமி ஜித்ரானந்த் சரஸ்வதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.