ரத்தன் லாலின் பின்னணியில்…

டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ரத்தன் லால், வாரணாசியின் சர்ச்சைக்குரிய ஞானவாபி கட்டடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் குறித்த ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைக் கூறியதற்காக கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ரத்தன் லால் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய வழக்கறிஞர் மெஹ்மூத் பிரச்சா அவரைக் காப்பாற்ற முன்வந்துள்ளார். கடந்த காலங்களில் மதவெறியை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர். வழக்கறிஞர் மெஹ்மூத் பிரச்சா.  ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவு ஊடகமான ‘வாய்ஸ் ஆஃப் ஹிந்த்’ என்ற பத்திரிகையில் இவரது அட்டைப்படம் இடம் பெறும் அளவுக்கு இவர் கடந்த காலங்களில் வகுப்புவாத வெறுப்பை பரப்பியவர். 2020ம் ஆண்டில், ஹிந்து எதிர்ப்பு டெல்லி கலவர வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறை இவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இது தவிர, முஸ்லிம்களை ஆயுதம் ஏந்துமாறு அறிவுறுத்தியதாகவும் மெஹ்மூத் பிரச்சா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இடதுசாரிகளின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ) மற்றும் அனைத்திந்திய மாணவர் சங்கம் (ஏ.ஐ.எஸ்.ஏ) ஆகியவை, ரத்தன் லால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவல் நிலையத்தின் வாயிலில் வெளியே சாலை மறியல் செய்தனர்.