அமைச்சரின் துரித செயல்பாடு

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், கடந்த 25ம் தேதி கோவை வந்தார். தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் (சிட்ரா) உள்ள நவீன தொழில்நுட்பங்களை பார்வையிட்ட அவர், அங்கு நிறுவப்பட்டுள்ள அதிக திறன்மிக்க சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் மெஷின் இயக்கம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து திருப்பூரில் நடந்த ஏற்றுமதியாளர் சந்திப்பில் பேசியஅவர், ”ஒரு நிமிடத்தில் 300 சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் திறன்மிக்க மெஷின் கோவை ‘சிட்ரா’வில் உள்ளது. ஆனால்,அந்த மெஷின் பெரிய அளவில் இயக்கப்படவில்லை. உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்புகொண்டு பேசினேன்; பிரதமரின் ஜன் ஔஷதி திட்டத்தில் செயல்படுத்தப்படும் மருந்தகங்களுக்காக, ‘சிட்ரா’விலிருந்து சானிட்டரி நாப்கின் கொள்முதல் செய்யுமாறு தெரிவித்தேன்; வெகு விரைவில் அதற்கான ஆர்டர் வழங்கப்படும்” என்றார். இந்நிலையில், சுகாதாரத்துறையின் அழைப்பை அடுத்து, கோது பேசிய பிரகாஷ், ‘அமைச்சரின் துரித செயல்பாடு காரணமாக, டில்லியிலிருந்து உடனடியாக அழைப்பு வந்தது; ‘ஜன் ஔஎஷதி’ திட்ட அதிகாரிகளை சந்தித்து, ‘நாப்கின்’ தயாரிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளேன். மத்திய ஜவுளித்துறை வழங்கிய மானியத்தில் வாங்கப்பட்ட சீன தொழில்நுட்ப சானிட்டரி நாப்கின் உற்பத்தி மெஷின், ‘சிட்ரா’வின் மருத்துவ ஜவுளி பிரிவில் உள்ளது. ஆண்டுக்கு 6 கோடி நாப்கின் தயாரிக்கும் திறன் இருந்தபோதும் 60 ஆயிரம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து ஆர்டர் கிடைப்பதால், மருத்துவ ஜவுளிகளில் ஒன்றான நாப்கின் உற்பத்தி உத்வேகம் பெறும். ஏராளமான தொழில்முனைவோர் உற்பத்தியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.