தர்கா அருகே ரயில் பாதை

அகமதாபாத்தின் ராஜ்பூர் ஹிர்பூர் பகுதியில் உள்ள ஃபிரோஸ் சாஹேப் நி தர்கா அருகே ரயில் பாதை அமைக்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து ஷேக் ஓனாலி இஸ்மாயில்ஜி என்பவர் வக்ஃப் வாரிய தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தர்காவில் ரயில் பாதை அமைப்பதால் அங்கு பிரார்த்தனை செய்ய தடைபடும், கட்டுமானங்களுக்கு சேதம் ஏற்படும் எனவே அங்கு ரயில் பாதை அமைக்கக்கூடாது’ என கோரினார். முறையான அனுமதி பெற்ற பிறகே ரயில் பாதை அமைக்கப்படுகிறது. அது தர்கா வழியாக செல்லாது, தர்காவிற்குச் செல்லும் பாதை வழியாகவே செல்லும். தர்கா அறங்காவலர்கள் மாற்றுத் திட்டங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர்’ என்று  மாவட்ட ஆட்சியர் விளக்கினார். எனினும், வக்ஃப் தீர்ப்பாயம் ரயில் பாதை திட்டத்தை தடை செய்தது. தீர்ப்பாயத்தின் தவறான உத்தரவையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், ‘தர்கா அறங்காவலர் தர்கா வக்ஃப் சொத்து என்பதை நிரூபிக்கும் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை. ஷேக் ஓனாலி இஸ்மாயில்ஜி அறக்கட்டளையின் அறங்காவலர்’ அல்ல மேளாளர் மட்டுமே.  இந்த வழக்கைத் தாக்கல் செய்ய அவருக்கு உரிமை இல்லை. ரயில்வே நிலத்திற்கு அருகாமையில் தர்கா இருப்பதால் சுற்றியுள்ள நிலம் எல்லாம் தர்காவுக்கு சொந்தமானது அல்ல. மேலும், தீர்ப்பாயத்தின் உத்தரவு ஒரு தேசிய அளவிலான திட்டத்திற்கு இடையூறாக உள்ளது’ என கூறி வஃபு தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது.