புதுச்சேரி பட்ஜெட்

புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டும் இல்லாமல், புதுச்சேரி வரலாற்றில் புதுச்சேரி ஆளுநர் உரையும் பட்ஜெட் தாக்கலும் ஒரே நாளில் வருவது இதுவே முதல் முறை. மேலும், புதுச்சேரி சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழில் உரையாற்றினார். திருக்குறளை மேற்கோள்காட்டி தனது உரையை துவக்கிய ஆளுனர், புதுச்சேரியில் கொரோனா தொற்றை தற்போது அரசு கட்டுப்படுத்தி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள். கோவிட்டை முழுவதுமாக ஒழிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் 2020-21ம் நிதியாண்டில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 8,419 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து உள்ளது. புதுவையில், 250 காய்கறி விதைப்பைகள் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 11 டிராக்டர்கள், 9 பவர் டிரில்லர்கள், நெல் நடவு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.